அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.இந்த கோவில் வேலையை சிலர் பணம்பறிக்கும் செயலுக்கு பயன்படுத்தி திருட்டு தனமாக பணம் பறிகின்றனர்.

ஸ்ரீ ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை  அயோத்தியா என்ற பெயரில் இணையதளம் தொடங்கி அந்த இணையதளம் மூலம் பல்லாயிரக்கணக்கானமுகநூல் கணக்குகளுக்கு அதை அனுப்பி மக்களிடம் இருந்து லட்சகணக்கான பணத்தை ஐந்து பேர் மோசடி செய்து அதில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததை உண்மையான கோவில் நிர்வாகம்  இப்போது கண்டுபிடித்தார்கள். பிறகு அவர்களை காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுத்து ஐந்து பேரை கைத்து செய்து சிறையில் அடைத்து இருகின்றார்கள்.

இதில் கைது செய்யப்பட்ட ஆட்கள் 3 பேர் அமேதி தொகுதியை சேர்ந்தவர்கள் என்றும் இரண்டு பேர் பீகாரைசேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் அனைவரையும் கைது செய்து இருபதாக டெல்லியை சேர்ந்த காவல்துறை தெரிவித்து இருக்கிறது.