ஏழைகளின் ஊட்டி ஏற்காட்டில் இரண்டாம் சீசன் தொடங்கியது.

பெரும் பொருட்செலவு செய்து கோடை வாசஸ்தலங்களுக்கு செல்ல முடியாத ஏழைகளும் வந்து செல்லும் கோடை வாசஸ்தலமாக உள்ளது ஏற்காடு.

இந்த ஏற்காட்டில் தற்பொழுது இரண்டாம் கட்ட சீசன் தொடங்கியுள்ளது. டேலியா, ஜெனிலியா, சால்வியா போன்ற நூற்றுக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மலர்களின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கி உள்ளனர். படகு இல்லம் அண்ணா பூங்கா பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இன்று வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

கு.இராசசேகரன், செய்தியாளர்.சேலம்.