மேட்டூர் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் திருட்டு. மேட்டூர் அருகே உள்ள கருங்கரடு சுண்ணாம்பு குட்டையை சேர்ந்தவர் மதன்ராஜ் (29). மேட்டூர் சதுரங்காடியில் செல்போன்கள் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த 17ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு தனக்கு சொந்தமான சொகுசு காரை நிறுத்திவிட்டு உறங்க சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த பொழுது சொகுசு காரை காணவில்லை. இரண்டு நாட்களாக தேடிப் பார்த்தும் அக்கம் பக்கத்தில் விசாரித்து பார்த்தும் கார் கிடைக்காததால் இன்று மாலை மேட்டூர் போலீசில் மதன்ராஜ் புகார் செய்தார். உதவி ஆய்வாளர் சேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருட்டு போன சொகுசு காரின் மதிப்பு ரூ.3லட்சம் இருக்கும்.
ஜினித் குமார், செய்தியாளர்.