சேலம் மாநகராட்சி பகுதியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் இன்று காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார் .

இதனையடுத்து சேலம் மாநகராட்சி மற்றும் மாவட்ட பகுதிகளிலும் இன்று காலை காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

சேலம் மாநகராட்சி பகுதியில்
28 இடங்களில் இன்று காலை காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கியது.

சேலம் மணக்காடு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாமை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சேலம் மா நகராட்சி ஆணையாளர் ஆணையாளர் கிறிஷ்துராஜ், துணை மேயர் சாரதா தேவிமற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் விழாவில் பங்கேற்றனர்.

முகாமில் மாணவிகளுக்கு காய்ச்சல் தடுப்பு ஊசியும் போடப்பட்டது.

இது போல் சேலம் மாவட்டம் முழுவதும் 240இடங்களில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் இன்று காலை நடந்தது.

இந்த முகாம்களில் திரளான மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாககலந்து கொண்டனர்.