தலைவாசல் அருகே பரிதாபம்

ஒன்றரை வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி

பெற்றோர் கூறுவது உண்மையா? போலீசார் விசாரணை

தலைவாசல் அருகே உள்ள கெங்கவல்லி பகுதியில் தண்ணீர் தொட்டியில் ஒன்றரை வயது பெண் குழந்தை தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறப்பட்டது .இது உண்மையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது கெங்கவல்லி.
இங்குள்ள 74 கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார்.
கூலித் தொழிலாளி,


இவரது மனைவி புஷ்பலதா.
இவர்களுக்கு
திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது .

ஆனால் ஐந்து வருடமாக புஷ்பலதாவிற்கு குழந்தை இல்லை .

இதன் பின்னர் தான் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

தற்போது அந்தப் பெண் குழந்தைக்கு வயது ஒன்றரை வயது ஆகிறது .

குழந்தையின் பெயர் ருத்ரா ஆகும்.


இன்று பிற்பகலில் வீட்டு அருகே குழந்தை ருத்ரா விளையாடிக் கொண்டிருந்தாள்.

குழந்தையின் தாயாரும், குழந்தையின் பாட்டியும் அருகே உள்ள தோட்டம் பகுதியில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது குழந்தை ருத்ரா வீட்டுக்கு வெளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து விட்டதாகவும் ,
உடனே குழந்தையை கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டது என்று கூறியதாகவும் பெற்றோர் தெரிவித்தனர் .

பின்னர் இது குறித்து கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது .

இதனையடுத்து கெங்கவல்லி போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்ததா ?
அல்லது குழந்தையின் சாவிற்குவேறு ஏதும் காரணம் உள்ளதா? என்று விசாரித்து வருகின்றனர்.