கோனேரிப்பட்டி நீர்மின் கதவனை தண்ணீர் வெளியேறும் பகுதி பாறை திட்டுக்களாக காட்சியளிக்கிறது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மலை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியாக குறைந்தது.இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் வெள்ளைக்காராக காணப்பட்ட கோனேரிப்பட்டி நீர்மின் கதவணை பகுதியில் காவிரி ஆறு திட்டுகளாக காட்சியளிக்கிறது குறைந்த அளவில் உள்ள தண்ணீரில் கிராமப்புற பகுதி மக்கள் தூண்டில் போட்டு மீன்கள் பிடித்து வருகின்றனர் அவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களை ஜிலேபி ஒரு கிலோ ரூ150 வீதம் விற்பனை செய்து வருகின்றனர் நீர்மின் கதவணையில் தண்ணீர் வெளியேறும் பகுதியில் நுங்கு நுரையுமாக செல்லும் பகுதியில் பாலத்தின் வழியாக வாகனத்திலும் நடந்து செல்வோர் பாலத்தில் இருந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.