ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. குறிப்பாக ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட ஊர்களில் அதிகமான மீன்பிடி படகுகளை நம்பி ஏராளமான மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் தற்போது புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் பலர் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் பிடித்து வரக்கூடிய அனைத்து வகையான மீன்களின் விலைகளும் சற்று விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. விளை மீன், பாறை மீன், முரல், வாவல் உள்ளிட்ட அனைத்து வகை மீன்களும் ஏற்கனவே இருந்த விலைகளில் இருந்து ரூ.50-ல் இருந்து ரூ.100 வரை குறைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மீனவர்கள் பிடித்து வரக்கூடிய மீன்களின் விலை குறைந்துள்ளதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ரூபன் செய்தியாளர்- ராமநாதபுரம் மாவட்டம்