23.09.22 மேட்டூர் அணை நீர்வரத்து 3வது நாளாக வினாடிக்கு 15,000 கன அடி.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 3 வது நாளாக வினாடிக்கு 15,000 கன அடியாக நீடித்து வருகிறது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 கன அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 600 கன அடியிலிருந்து வினாடிக்கு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக இருந்தது.
மேட்டூர் அணை நீர்வரத்து 3 வது நாளாக வினாடிக்கு 15,000 கன அடியாக நீடிக்கிறது ..
- Details
- Written by P. Jineethkumar
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 47