சேலம் மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு திட்ட பணிகளை சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் ,
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவருமான சண்முகராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடக்கிறது .
இது தவிர பல்வேறு பணிகளும் நடந்து வருகிறது ,
இந்த நிலையில் இந்த பணிகளை பார்வையிட சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்,
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவருமான சண்முகராஜா இன்று வந்து பார்வையிட்டார் .
முதலில் அவர் சேலம் மணக்காடு பகுதியில் நடந்து வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்ட பணிகளை பார்வையிட்டார்.
காலை உணவு சரியாக வழங்கப்படுகிறதா? போதிய அளவு உணவு செய்யப்படுகிறதா என்றும் கேட்டு அறிந்தார்.
இதன் பிறகு அவர் மணக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று அங்கு நடந்து வரும் கட்டிட பணிகளை ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் நிலவாரப்பட்டி பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்ட குறித்து பார்வையிட்டு கேட்டு அறிந்தார். இதன் பிறகு சேலம் அருகே உள்ள பனமரத்துப்பட்டி ஏரி பகுதிக்கு அவர் சென்று அங்கு மழைநீர் தேங்கியுள்ளதா என்று பார்வையிட்டார் .
இது தவிர பனமரத்துப்பட்டி ஏரியில் வேறு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என அதிகாரியிடம் கேட்டு அறிந்தார்.
இந்த ஆய்வில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ,
சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.