மேட்டூர் அணை நீர்மட்டம் 119.72 கன அடியாக சரிவு.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,072 கன அடியாக சரிந்தது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.02 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.72 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 119.72 கன அடியாக சரிவு
- Details
- Written by P. Jineethkumar
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 87