ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்த தர்மர் எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதற்காக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியாக இருந்த தலைவர் பதவிக்கு தேர்தல் அலுவலர் மாடசாமி சுந்தர்ராஜ் முன்னிலையில் தேர்தல் நடந்தது. இதில் 14 ஒன்றிய கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர். போலீஸ் டி.எஸ்.பி. சின்ன கன்னு தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தி.மு.க. சார்பில் வேட்பாளராக 2-வது வார்டு விக்கிரபாண்டியபுரம் கவுன்சிலர் சண்முகபிரியா ராஜேஷ் போட்டியிட்டார்.

ரூபன் செய்தியாளர் -ராமநாதபுரம் மாவட்டம்