முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியது சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை.மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சான்றிதழ் வழங்கி பாராட்டு.


முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை டீன் (பொறுப்பு) மருத்துவர் தனபாலுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

சேலம் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்ட மூலம் 8 அரசு மருத்துவமனைகள் ,
63 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ சேவை செய்யப்பட்டு வருகிறது.

இதில் சிறப்பாக செயல்பட்ட சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும்,ஆத்தூர் அரசு மருத்துவமனை,சேலம் தரன் தனியார் மருத்துவமனை ஆகியவற்க்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

சேலம் மாவட்டத்தில் காப்பீடு திட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 53 ஆயிரத்து 96 பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து சேலம் மாவட்ட சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை டீ ன் (பொறுப்பு )மருத்துவர் தனபாலுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை இரண்டு லட்சத்து 53 ஆயிரத்து 96 பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 லட்சத்து31 ஆயிரத்து 487 குடும்பம் பதிவு செய்யப்பட்டு காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.