இடங்கணசாலை நகராட்சி பகுதியில் தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு.


சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி 26-வது வார்டு பகுதியில் தூய்மை பணிக்கான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு , சுற்றுப்புற சுத்தம் உள்ளிட்டவைகளுக்கான சிறப்பு முகாம் நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகரங்களின் தூய்மைப் பணிக்கான மக்கள் இயக்கம் சார்பில் எனது குப்பை, எனது பொறுப்பு என்ற குறிக்கோளுடன் அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கி, உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதனை தொடர்ந்து மக்கும் குப்பை, மக்கா குப்பையை எவ்வாறு பிரித்து எடுத்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இம்முகாமில் நகராட்சி துணைத் தலைவர் தளபதி, ஆணையாளர் (பொ) முஸ்தபா, வார்டு கவுன்சிலர்கள் முத்தம்மாள், சிவகுமார், வேலாயுதம், இந்திராணிவஜ்ரவேல், விஜயலட்சுமிகுமார், சித்ராசதாசிவம், நதியாராஜேந்திரன், வார்டு செயலாளர் நித்யா , துப்புரவு ஆய்வாளர் நிருபன்சக்கரவர்த்தி, பரப்புரை மேற்பார்வையாளர் கலைவாணி, பரப்புரையாளர்கள் மீனா, சங்கீதா, சந்தியா மற்றும் தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செல்வராஜ் , செய்தியாளர் .இளம்பிள்ளை.