மேட்டூர் அனல் மின் நிலையம் நுழைவாயில் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.இதில்
மின் வாரிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும்,
மின் வாரியத்தில் அவுட்சோர்சிங் முறையில் வேலை வழங்குவதை கைவிட வேண்டும், மின்வாரிய ஆணை 2-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் ,அரசு ஆணை 100 தொடர்பாக தமிழக அரசின் உத்தரவாதத்துடன் கூடிய முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இதேபோல்
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.