சேலம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

சரியாக பாடம் எடுக்காததால் மாவட்ட கல்வித் துறை அதிகாரி நடவடிக்கை.


சேலம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சரியாக பாடம் எடுக்காததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் அருகே உள்ளது எருமாபாளையம் .

இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.

எருமாபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளானோர் இங்கு வந்து படிக்கின்றனர் .
தற்போது சுமார் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.

இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடம் எடுக்கும் ஆசிரியர் செந்தில்குமார் சரியாக பாடம் எடுக்கவில்லை என புகார் வந்தது.

பெற்றோர் பலரும்தலைமை ஆசிரியரை நேரில் சந்தித்து கணித ஆசிரியர் செந்தில்குமார் மீது புகார் தெரிவித்திருந்தனர்.

இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் கணித ஆசிரியர் செந்தில்குமாரை அழைத்து விசாரித்தார் .

இதில் கோபப்பட்ட செந்தில்குமார் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார்.

பிறகு அவர் தலைமை ஆசிரியரை மிரட்டவும் செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ,
சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகனிடம் புகார் செய்தார் .

இதனை விசாரித்த சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் பள்ளிக்கு வந்து நேரில் விசாரித்தார்.

இதில் கணித ஆசிரியர் செந்தில்குமார் சரியாக பாடம் எடுக்காதது தெரியவந்தது.

இதனையடுத்து சேலம் மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி முருகன், கணித ஆசிரியர் செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.