வாழப்பாடி:
காதல் விவகாரத்தில் 17 வயது சிறுமி சடலமாக மீட்பு: தற்கொலையா கொலையா என்ற கோணத்தில் வாழப்பாடி டிஎஸ்பி தலைமையில் போலீசார் விசாரணை:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெரிய கவுண்டபுரம் ஊராட்சியில் ஸ்ரீதேவி (17)ஒன்பதாம் வகுப்பு முடித்துவிட்டு பெற்றோருடன் வீட்டிலிருந்துள்ளார்,
இந்த சிறுமியைஅதே பகுதியைச் சார்ந்த மாற்று பழங்குடியினத்தின் சமூகத்தைச் சேர்ந்த சம்பத் (32) காதலித்து கடந்த 19ஆம் தேதி திருமணம் செய்து கொள்வதாக கூறி சேலத்தில் உறவினர் வீட்டில் கடத்திச் சென்றுள்ளார்,
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் காரிப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சேலத்தில் உறவினர் வீட்டில் இருந்த சிறுமி ஸ்ரீதேவியை மீட்டன்னர்,
பின்னர் சம்பத்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதித்து காரிப்பட்டி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்,
இந்நிலையில் சிறுமிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர் இதற்கு ஸ்ரீதேவி மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் தாய் சேமலா 36 நேற்று இரவு 12 மணியளவில் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளதாகவும் அவரை கணவர் மீட்டு மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் மனைவியுடன் கணவர் அறிவழகன் இன்று காலை வீட்டிற்கு சென்றபோது வீட்டில் ஸ்ரீதேவி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் தகவலின் பெயரில் காரப்பட்டி போலீசார் வாழப்பாடி டிஎஸ்பி சுவேதா தலைமையில் விரைந்து சென்று உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க முற்பட்டனர் அப்போது உறவினர்கள் திடீரென்று முற்றுகையற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்,இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியுள்ளது இந்நிலையில் திருமணத்திற்கு மறுத்த ஸ்ரீதேவியை பெற்றோர்கள் கொலை செய்து விட்டு தாயார் விஷம் குடித்து தற்கொலை முயற்சித்து நாடகம் ஆடியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் மேலும் இது குறித்து வாழப்பாடி டிஎஸ்பி சுவேதா தலைமையில் காரிப்பட்டி காவல் ஆய்வாளர் கொண்ட குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் சிறுமி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும் என்பதும் அதன் பின் விசாரணை தீவிர படுத்தப்படும் என்பது போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.