கமுதி அருகே உள்ள செய்யாமங்கலம் கிராமத்தில் ஸ்ரீபூங்குழலி அம்மன், ஸ்ரீஅய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா கோலாகலமாக நடந்தது. இதைெயாட்டி அபிராமம் போலீஸ் நிலையம் அருகே மண் சிற்ப கலைஞர்களால் 48 நாள் விரதம் இருந்து வடிவமைக்கப்பட்ட குதிரை, அய்யனார், ஐந்து தலை நாகர், விநாயகர், காளை மாடு, தவழும் பிள்ளை சிலைகள், கால் பாதம் என 178 சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து, மேளதாளங்கள், வாணவேடிக்கையுடன் சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு, பஸ்நிலையம் வழியாக செய்யாமங்கலம் கிராமத்திற்கு பக்தர்கள் எடுத்துச் சென்றனர். இதில் செய்யாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கமுதி துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரூபன் செய்தியாளர்- ராமநாதபுரம் மாவட்டம்