மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,910 கன அடியாக சரிவு. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்த மழை குறைந்ததால் நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 16,484 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 13910 கன அடியாக சரிந்துள்ளது.இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.65 கன அடியாகவும் நீர் இருப்பு 91.33 டி.எம்.சியாகவும் உள்ளது.