கனககிரியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உட்பட்ட செட்டியார் காடு பகுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பட்டீஸ்வரி பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பங்கேற்று ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்ட பணியில் குறித்து கேட்டறிந்தார். இந்த கிராம சபை கூட்டத்தில் சங்ககிரி ஆர்டிஓ சௌமியா, தாசில்தார் பானுமதி, மகுடஞ்சாவடி பீடிஓ (கி.ஊ) முத்துசாமி மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அலுவலர் முத்துசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்,அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பங்கேற்று பேசுகையில், சேலம் மாவட்டத்தில் 10,000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும், சேலம் மாவட்டத்தில் கல்வி கற்றோரின் எண்ணிக்கை 65.6 சதவிதமாக இருப்பதை உயர்த்த பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், ஊராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு நல திட்டங்கள் மற்றும் அதன் பயனாளிகள் பட்டியல், ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் உள்ளிட்டவை குறித்து அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலக அறிவிப்பு பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்குமாறு அறிவுரை வழங்கினார். இதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.