மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,961 கன அடி.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை தனிந்து வருவதால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,419 கன அடியிலிருந்து வினாடிக்கு 15961 கன அடியாக சரிந்தது.  இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  வினாடிக்கு 15,000 கன அடி வீதமும்  கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.71 கன அடியாகவும் நீர் இருப்பு 91.42 டி.எம்.சியாகவும் உள்ளது.  மேட்டூர் அணையில் நீர்வரத்து சரிந்ததால் அணையின் நீர்மட்டமும் மெல்ல சரியத் தொடங்கியுள்ளது.