ஆட்டையாம்பட்டியில் 1 டன் ரேஷன் அரிசி சிக்கியது.


சேலம் ரூரல் டிஎஸ்பி தையல்நாயகி உத்தரவின் பேரில் ஆட்டையாம்பட்டி சப். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குப்புராஜ் ஆகியோர் ஆட்டையாம்பட்டி மாமுண்டி பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போவில் சிறு, சிறு மூட்டைகளாக ரேஷன் அரிசி மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. இது குறித்து விசாரணையில் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் செந்தில் (43)என்பவரின் வாகனத்தை இடங்கணசாலை பகுதியைச் சேர்ந்த அர்த்தனாரி மகன் சக்திவேல் (33) என்பவர் ஓட்டி வந்துள்ளார். மேலும், விசாரணையில் ஆட்டையாம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.இது தொடர்பாக ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் அம்சவல்லி டெம்போ மற்றும் சுமார் ஒரு டன் எடை கொண்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

செல்வராஜ் செய்தியாளர், இளம்பிள்ளை.