விதை பண்ணை அமைத்து இலாபம் பெற கொங்கணாபுரம் விவசாயிகளுக்கு  அழைப்பு,,
கொங்கணாபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்  அ.சாகுல்அமீத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கொங்கணாபுரம் வட்டாரத்தில் மாநில திட்ட வேளாண்மை துணை இயக்குநர் திரு. சீனிவாசன் திடீர்  களஆய்வு  மேற்கொண்டார்.

விவசாயிகளிடம் விதை பண்ணை அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது கொங்கணாபுரம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். பயறு வகை பயிர்களில் விதைபண்ணை அமைத்து சம்பா நெல்லுக்கு பின்  பயறு வகை பயிர்கள் பயிரிட வேண்டி பாசிபயறு 183 ஹெக்டேரிலும், உளுந்து 9 ஹெக்டரிலும் தட்டைப்பயறு 12 ஹெக்டரிலும் அமைக்க இலக்கு நிர்ணயம்  பெறப்பட்டுள்ளது.  விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு ஆதார விதை , உயிர் உரம் ஆகியன மானியத்தில் வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  விதைப்பண்ணை  அமைக்கும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விதைகள்  கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் கொங்கணாபுர  வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தினை   அணுகி உதவி விதை அலுவலர் திரு. ஆர்.ஜெ. செந்தில் குமார் மற்றும் இதர அலுவலர்களை அணுகி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது