மேட்டூர் அணை பூங்காவிற்கு 4,722 பார்வையாளர்கள் வந்து சென்றனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூர் அணை பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். மேட்டூர் காவிரியில் நீராடிய சுற்றுலா பயணிகள் அணைக்கட்டு முனியப்பனை தரிசித்தனர். வேண்டுதல் செய்த பக்தர்கள் அணைக்கட்டு முனியப்பனுக்கு ஆடு கோழி பலியிட்டு பொங்கலிட்டனர். பின்னர் மேட்டூர் அணை பூங்காவிற்கு சென்று குடும்பத்தினருடன் விருந்து உண்டு மகிழ்ந்தனர்.
சறுக்கி விளையாடியும் ஊஞ்சலாடியும் சிறுவர்களும் பெரியவர்களும் மகிழ்ந்தனர். மீன்காட்சி சாலை, பாம்பு பண்ணை, மான் பண்ணை முயல் பண்ணை ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் அணை பூங்காவிற்கு 4722 பார்வையாளர்கள் வந்து சென்றனர் இதன் மூலம் பார்வையாளர்கள் கட்டணமாக ரூ.23,610 வசூலானது.
மேட்டூர் அணையின் பவள விழா கோபுரத்தை காண 736 பேர் வந்து சென்றனர் இதன் மூலம் பார்வையாளர்கள் கட்டணமாக ரூ.3,680 வசூலானது