டெல்டா பாசனம் வசதிக்காக ஒரு ஒரு ஆண்டும் காவிரி நீரை திறந்து விடுவது வழக்கம். இந்த ஆண்டும் அதுபோல் ஜூன் 12 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வந்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து அது டெல்டாவில் விவசாயம் செய்ய நீர் சென்று கொண்டு இருக்கிறது. இதில் எப்போதும் போல் கர்நாடகாவில் இருந்து நீர்வரத்து அதிகமாக இருந்து நீர் திறப்பு நடந்தால் அனைவருக்கும் நல்லதுதான்.

முதல்வர் மேட்டூர்அணை நீர் திறப்பின்போது அணையின் நீர் மட்டம் 95.9 அடியாக இருந்ததது. இப்போது சரியாக பதினெட்டு நாள் முடிவில் அணையின் இன்றையதினம் நீர் மட்டம் 85.31 அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து வரும் நீரின் அளவு வினாடிக்கு 5130 கன அடியாக இருந்து வருகின்றது.

ஆனால் அணையில் இருந்து இவர்கள் டெல்டாவில் பாசனம் செய்ய விடும் நீரின் அளவு மூன்று மடங்கு அதிகமாக 15000 கன அடியாக இருக்கிறது. இதனால் நீரின் அளவு விரைவாக குறைந்துள்ளது . எப்போதும் இந்த தென்மேற்கு பருவ மழை காலங்களில் கர்நாடகாவில் இருந்து மழைநீர் அதிகமா வரும். ஆனால் இந்த ஆண்டு மிக மிக குறைவாகவே மழை அளவு கர்நாடகாவில் இருப்பதால் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவும் குறைவாகவே இருக்கிறது. இப்படியே சென்றால் அடுத்த வருடம் வரை மேட்டூர்அணை நீர் இருப்பு மிக மிக குறைவாக இருக்கும்.

இதனால் சேலம்,தருமபுரி , நாமக்கல்,திருச்சி கரூர் போன்ற மக்களின் குடிநீர் தேவையை கருத்தில்கொண்டு கர்நாடகாவில் இருந்து நமக்கு வருடா வருடம் வர வேண்டிய நீரை கேட்டு பெறுமா இந்த திமுக அரசு என்று சேலம் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் பேசிகொள்கின்றனர். ஏற்கனவே திமுக ஆட்சியில் மேட்டூர்அணை நான்கு முறை நீர் வரத்து இல்லாமல் இருந்த வரலாறும் உண்டு என்று சொல்லி திமுக ஆட்சி செண்டிமெண்ட்கள் பற்றி பேசிகொள்கின்றனர்.