அஸ்தமனம் ஆகும் அமமுக ; தட்டி தூக்கிய முன்னாள் முதல்வர் எடப்பாடி. 

தினமும் அதிமுக தொண்டர்களிடம் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம்பேசி அவர்களை அதிமுக கட்சியை விட்டு காலி செய்து வந்த சசிகலாவின் சென்னை கூடாரத்தை காலி செய்து அதிர்ச்சி வைத்தியம் கூடுது இருக்கின்றார் முன்னாள் முதல்வர்.

அதிமுகாவில் இருக்கும் சசிகலாவின் ஆதரவு ஆட்களை தினமும் சசிகலா அலைபேசியில் தொடர்ந்து பேசிக்கொண்டு வருவகின்றார். அது மட்டும் இல்லாமல் கட்சியை நான் வந்து சரி செய்கின்றேன் என்றும் தினமும் யாருக்காவது போனை போட்டு அதை பதிவு செய்து அதை தொலைகாட்சியில் போட்டு அதிமுக கட்சியை பிடிப்பேன் என்று தமாஷ் காட்டிக்கொண்டு இருந்த நேரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கூண்டோடு தூக்கும்  வியூகம் கண்டு இப்போது வெளியில் காட்டிகொள்ளாமல் மனதளவில் கடும் கோபத்தில் இருக்கின்றார் என்றே கூறுகின்றார்கள்.

 

சேலத்தில் நேற்று அமமுக சென்னை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அமமுக சேர்ந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுபினருமான பொன்.ராஜா, வடசென்னை அமமுக மாவட்ட செயலாளர் லட்சுமி நாராயணன் , மத்திய சென்னை அமமுக மாவட்ட செயலாளர் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் நேற்று சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையில் அதிமுக கட்சியில் இணைந்தார்கள். மேலும் சசிகாலாவின் நடவடிக்கையால் அமமுக கட்சி நிர்வாகி ஆட்கள் அனைவருமே சீக்கிரம் அந்த கட்சியில் இருந்து விலகி விடுவார்கள் என்று அவர்கள் நேற்று கூறினார்கள்.

 

ஏற்கனவே செந்தில் பாலாஜி , தேனி தங்க தமிழ்செல்வன், புகழேந்தி போன்ற ஆட்கள் எல்லாம் அங்கெ பிழைக்க முடியாது என்று திமுகாவில் சிலர் சேர்ந்து விட்டனர். அதில் செந்தில் பாலாஜியின் வேகம்தான் சிலருக்கு பிரமிப்பை கொடுத்து இருக்கு. அதனால் இருக்கும் அமமுக ஆட்கள் தங்கள் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகும் முன்னாடி ஏதாவது ஒரு கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டு செயல்படலாம் என்று அதிமுக நோக்கி படை எடுத்து வருகின்றார்கள். இங்கே நான்கு ஆண்டுகள் வேலை செய்தால் கண்டிப்பாக அடுத்த தேர்தலில் சீட் கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டு வருகின்றார்கள் என்று அதிமுக நிர்வாகிகள் கூறினார்கள்.

சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு செய்த சத்தியம் என்ன ஆகும் என்றே டிடிவி தினகரன்  தொண்டர்கள் நினைகின்றார்கள். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தினகரன் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த கட்சியை சசிகலா வளர்க்காமல் அதிமுக கட்சியை பிடிப்பேன் என்று நாளொரு ஆடியோ வெளியிட்டு வருவது அவர்கள் கட்சி ஆட்களுக்கே பிடிக்கவில்லை என்று நேற்று அதிமுகாவில் இணைந்த அமமுக ஆட்கள் தெரிவித்தனர்.