ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்த 274 மனுக்கள் பெற்றார். மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் இருந்து பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும் தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனு தாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். அப்போது தான் அது போன்ற மனுக்கள் திரும்பத் திரும்ப வராது. எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

ரூபன் செய்தியாளர் -ராமநாதபுரம் மாவட்டம்