வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த சோமம்பட்டியைச் சேர்ந்த லிங்கேஸ்வரி(14) இந்திரா நகர் பகுதியைச் சார்ந்த ஹரிணி (14) ஆகிய இரண்டு மாணவிகளும் சாணி பவுடர்சாப்பிட்டுள்ளனர்,மாணவிகள் சட்டையில் காரை உள்ள நிலையில் வகுப்பறையில் இருந்ததை பார்த்த ஆசிரியர்கள் அந்த மாணவிகளை விசாரித்துள்ளனர் அப்பொழுது சாணி பவுடர் சாப்பிட்டது தெரியவந்ததின் அடிப்படையில் உடனே வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு மாணவிகளை அழைத்துச் சென்று சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இது குறித்து வாழப்பாடி டிஎஸ்பி சுவேதா தலைமையில் வாழப்பாடி போலீசார் விசாரணையில் பெற்றோர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் இந்த மாணவி படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இந்த மாணவி தனது உறவினரான அத்தை வீட்டில் தங்கி பயின்று வரும் சூழ்நிலையில் ஹரிணி பள்ளியில் சோகமாக இருந்த நிலையில் அதன் தோழியான லிங்கேஸ்வரி ஆகிய இருவரும் சோகத்தை பகிர்ந்துள்ளனர், அப்போது ஹரிணியின் சகோதரர் அடிக்கடி இந்த பெண்ணை பிடித்து அடித்து வருவதாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறியு கேட்ட லிங்கேஸ்வரியும் எங்கள் வீட்டிலும் இதே போல் நடந்து வருகிறது என்று இருவரும் உயிர் வாழ விருப்பமில்லை உடனே ஏதாவது செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆ.ப.செந்தில்குமார்,செய்தியாளர்வாழப்பாடி.