வாழப்பாடி:
வாழப்பாடி அரசு பள்ளி மாணவி தேசிய அளவில் அறிவியல் போட்டியில் முதல்முறையாக மூன்றாமிடம் பிடித்து ஒன்றிய அமைச்சரிடம் பராட்டு சான்று:
வாழப்பாடி புதுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தேசிய அளவில் நடைபெற்ற அறிவியல் மற்றும் கண்காட்சி போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வாழப்பாடிக்கு பெருமை சேர்த்துள்ளார்,
தேசிய அளவில் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற மாணவ மாணவியருக்கான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் சேலம் மாவட்டம் வாழப்பாடி புதுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற +1 மாணவி போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்து தமிழகத்திற்கும் சேலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்:
புதுடில்லியில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் கண்காட்சி போட்டிகள் நடைபெற்றுள்ளது,
இந்த போட்டியில் நாடு முழுவதும் 576 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்,
தமிழகத்தில் இருந்து 4 மாணவிகள் உட்பட 13 மாணவர்கள் கலந்து கொண்டனர்,
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் குமரவடிவேல் தெருவில் வசித்து வரும் முடித்திருத்துவராக உள்ள மதியழகன் சந்தியபிரியா ஆகியோரின் இளைய மகளான இளம்பிறை (16)வாழப்பாடி புதுப்பாளையம் அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார்,
இவர் தனது அறிவியல் சார்ந்த அறிவுத்திறனை பயன்படுத்தி வடிவமைத்து செயல் விளக்கம் அளித்த அடுக்குமாடி குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் லிப்ட் இயந்திரங்களில் இயந்திர கோளாரு ஏற்படும் போது விபத்துகளை தடுக்க கூடிய கருவி கண்டுபிடித்து விளக்கியுள்ளார்,
மாணவியை போட்டி தேர்வு குழுவில் மூலமாக மூன்றாம் இடம் பிடித்து பரிசு பெற்றுள்ளார்,
இந்த புதிய கண்டுபிடிப்பு தேசிய அளவில் இன்ஸ்பயர் விருதும்,மூன்றாம் பரிசு வழங்கி உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து தேசிய அளவிலான விருதை கடந்த ஒன்பது ஆண்டுகளில் முதல்முறையாக இந்த மாணவி பெற்றதற்கு தமிழகம் மற்றும் சேலம் மாவட்ட மக்கள் அந்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்,
கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜெயேந்திர சிங் அவர்கள் இந்தமாணவி இளம்பிறைக்கு விருதினை வழங்கி பாராட்டியுள்ளனர்,
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வாழப்பாடி அரசு பள்ளிக்கு இந்த மாணவி பெருமையை சேர்த்துள்ளார்,இந்த மாணவி மருத்துவராகி பொதுமக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆ.ப.செந்தில்குமார்,செய்தியாளர்வாழப்பாடி.