தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வழிபாடு செய்வதற்கு நேற்று இரவு வருகை தந்தார். ராமேசுவரம் வந்த அமைச்சரை தி.மு.க. சார்பில் நகர் மன்ற முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன் வரவேற்றார். இன்று அதிகாலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனுஷ்கோடி கடல் பகுதியில் சிறப்பு பூஜை செய்தார். அதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலில் அமைத்துள்ள 22 புனிதத் தீர்த்தங்களில் நீராடி, பின்னர் ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

ரூபன் செய்தியாளர் -ராமநாதபுரம் மாவட்டம்