ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் மூலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை எளிதாக கையாளும் வகையில் விலையில்லா கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கி பேசியதாவது:- அரசுபள்ளியில் பிளஸ்-2 படித்து மருத்துவ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க தேவையான, தேர்வுக்கான எளிய பயிற்சி முறையை போதியளவு மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. தற்போது அரசு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியை பையூஸ் ஆகாஷ் நிறுவனம் மூலம் இணையதளத்தில் விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கல்வி உதவி தொகையுடன் பயிற்சி வழங்கும் வகையில் மத்திய அரசு 117 முன்னேற விளையும் மாவட்டங்களை தேர்வு செய்து இத்தகைய பயிற்சிகளை வழங்குகிறது.
ரூபன் செய்தியாளர் -ராமநாதபுரம் மாவட்டம் .