சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு .
தெற்கு ரயில்வே
பொது மேலாளர்
பி.ஜி. மல்லையா சேலம் ரெயில்வே கோட்டத்தில் நடக்கும் பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதுபோல சேலம் சூரமங்கலம் அருகில் உள்ள ஜங்ஷன் ரயில் நிலையத்திலும் பல்வேறு பயணிகள் நடந்து வருகிறது .
இந்த நிலையில் இந்த பணிகளை இன்று காலை தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி. மல்லையா ஆய்வு செய்தார்.
சென்னையில் இருந்து தெற்கு ரயில்வே பொது மேலாளரும், மற்ற அதிகாரிகளும் தனி ரயில் மூலம் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தனர்.
பின்னர் தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி. மல்லையா சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகள் எளிதாக டிக்கட் எடுக்கும் எந்திரத்தை திறந்து வைத்தார்.
இதன் பின்னர் அவர் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முழுவதும் நடந்து சென்று ரயில் நிலையத்தில் நடந்த வரும் பணிகள் குறித்தும் ,வேறு என்ன வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி. மல்லையா சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வந்து ஆய்வு செய்வதை அறிந்த சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக உறுப்பினர் இரா.அருள் கோரிக்கை அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினார்.
இந்த ஆய்வில் சேலம் ரயில்வே கோட்ட பொது மேலாளர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் , தொழில்நுட்ப அதிகாரிகள் கலந்து கொண்டனர்.