சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அலுவலகத்திற்கு ரேஷன் அரிசி குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று வருவதாக ரகசிய தகவல் வந்தன. இதனையடுத்து  காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் போலீசார் சேலம் அருகே கருப்பூர், வெள்ளாளப்பட்டி, சந்தப்பேட்டை பகுதியில் பரிசோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனில் சோதனையிட்டதில் 50 கிலோ எடையுள்ள 31 மூட்டைகளில் 1.5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தன. இதனையடுத்து தீவிர விசாரணையில் சேலம் பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிம்சோன்( எ) தினேஷ் (30) என்பவர் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக  ஒப்புக் கொண்டார். இதனையடுத்து தினேஷ்யை கைது செய்து சேலம் குடிமைப் பொருள் வழங்கல் புலனாய்வுத்துறையினர் வழக்கு பதிந்து, 1.5 டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து சேலம் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.