மேட்டூர்-22.09.22 மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 15,000 கன அடி.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மலை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று மாலை வினாடிக்கு 15,000 கன அடியாக சரிந்தது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 கன அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர்வந்து கொண்டிருந்தது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக இருந்தது.
மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 15,000 கன அடியாக சரிவு
- Details
- Written by P. Jineethkumar
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 50