மேட்டூரில் வருவாய் துறையில் பணி புரியும் பணியாளர்கள் அலுவலர்களின் குடும்பத்திற்கான சிறப்பு மருத்துவ முகாம் மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் வீர்பிரதாப்சிங் இன்று துவக்கி வைத்தார். மேட்டூர் வருவாய் கோட்டத்தில் உள்ள மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி தாலுகாக்களில் பணி புரியும் வருவாய்த்துறை அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கான சிறப்பு மருத்துவ முகாம் மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று துவங்கியது. மேட்டூர் சார் ஆட்சியர் வீர்பிரதாப்சிங் முகாமினை துவக்கி வைத்தார். கொளத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வி, மேட்டூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இளவரசி ஆகியோர் தலைமையில் 100 மருத்துவ பணியாளர்கள் இம்முகாமில் பணியாற்றி வருகின்றனர். சித்த மருத்துவம், பொது மருத்துவம், காது மூக்கு தொண்டை, தோல் மருத்துவம், இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. காசநோய் தொழுநோய் எய்ட்ஸ் பன்றி காய்ச்சல் ஆகியவற்றிற்கும் பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசியும் போடப்படுகிறது. மக்களை தேடி மருத்துவத்திற்கான சிறப்பு விழிப்புணர்வு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மேட்டூரில் வருவாய் துறையில் பணி புரியும் பணியாளர்கள் அலுவலர்களின் குடும்பத்திற்கான சிறப்பு மருத்துவ முகாம்
- Details
- Written by P. Jineethkumar
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 53