சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மின்னாம்பள்ளி அருள்மிகு செல்லியம்மன் மாரியம்மன் திருக்கோவில் நிலத்தில் தமிழக அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்தியிட "தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டம்" சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், மண்டல வனபாதுகாவலர் பெரியசாமி, சேலம் கோட்டாட்சியர் விஷ்ணுவர்தினி, ஆத்தூர் கோட்ட வன அலுவலர் சுதாகர், ஆகியோர் மரக்கன்று நட்டு துவக்கிவைத்தனர். இதில் மின்னாம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆவரணம் உதயகுமார், சமூக ஆர்வலர் ரத்தினவேல், சேலம் கோட்ட வனப் பணியாளர்கள், இந்து அறநிலையதுறை அலுவலர்கள் உள்பட அதிகாரிகள் மரக்கன்று நட்டு துவக்கிவைத்தனர்,சேலம் வனமண்டலத்திற்குட்பட்ட சேலம் ஆத்தூர் நாமக்கல் மாவட்ட பகுதிகளில் 9 லட்சம் மரக் கன்றுகள் நட உள்ளதாக சேலம் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
"தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டம்" சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் மரக்கன்று நட்டு துவக்கிவைத்தார்
- Details
- Written by A.P.Senthil kumar
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 112