சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தேக்கல்பட்டி பகுதியை சேர்ந்த பாக்கியம் தங்கமணி (60) என்ற விவசாய கூலி தொழிலாளியின் தகர கூரை வீடு மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்து சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வாழப்பாடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து உள்ளனர் , மேலும் இதுகுறித்து வருவாய்த்துறை, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.