இடங்கணசாலை நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆலோசனை கூட்டம்.
சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி கூட்ட அரங்கில் திடக்கழிவு மேலாண்மை ஆலோசனைக் கூட்டம் நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் தலைமையிலும், துணைத்தலைவர் தளபதி, ஆணையாளர் முஸ்தபா , துப்புரவு ஆய்வாளர் நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் கோழி மற்றும் இறைச்சி கழிவுகளை ஏரி , குளம், குட்டை, சாலையோரம் ஆகிய இடங்களில் கொட்டுவதை தடுக்கும் வகையிலும், இதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் இறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு நடைபெற்றது. இதில் உரிமையாளர்களின் ஆலோசனைகளையும் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளையும் எடுத்துரத்தினர். மேலும், கோழி மற்றும் இறைச்சி கழிவுப்பொருட்களை கண்ட இடத்தில் கொட்டாமல் தனியாக அவரவர் இடத்தில் ஒதுக்கி அவ்விடத்தில் ஆழமாக குழி வெட்டி கழிவு பொருட்களை கொட்டி பாதுகாக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கோழி மற்றும் இறைச்சி கடை உரிமையாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.