அடிக்கடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு கூட்டம் நடத்தப்படுவதால் வழக்கமான பணிகள் பாதிப்பு.
மாதம் ஒருமுறை மட்டும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆய்வு செய்ய வேண்டும்.


தமிழ்நாடு கூட்டுறவுத்துறை நடுநிலை அலுவலர் சங்க மாநில கூட்டத்தில் தீர்மானம்.

சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள பொறியாளர் மாளிகை கூட்ட அரங்கில் தமிழ்நாடு கூட்டுறவு துறை நடுநிலை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது .

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் சண்முகராஜன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


மாநில பதிவாளர் அவர்களால் அடிக்கடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு கூட்டம் நடத்தப்படுவதால் வழக்கமான பணிகள் மிகவும் பாதிக்கப்படுகிறது

வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்திற்கு புள்ளிவிவரம் தயார் செய்வது போன்ற பணிகளிலேயே கால விரயம் ஏற்படுகிறது .

எனவே மாநில பதிவாளர் அவர்கள் மாதம் ஒருமுறை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆய்வு செய்தால் வழக்கமான பணிகள் பாதிக்காது .

பதிவாளர் கூறும் பணிகளை விரைந்து முடிக்கவும் ஏதுவாக இருக்கும் என்பது உட்பட 22 தீர்மானங்கள் இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமிழக அரசுக்கும் தெரிவிக்க உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.