கோ ஆப்டெக்ஸ் ஜவுளி விற்பனை நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார்….

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் உள்ள கோ ஆப்டெக்ஸ் பட்டு மற்றும் ஜவுளி விற்பனை நிலையங்களில் இன்று முதல் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கியது. சேலம் கடை வீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸின் தங்கம் பட்டு மாளிகையில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார்.இங்கு பல வண்ணங்களில் மென்பட்டு, பருத்திச் சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உரைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்த ஜவுளி ரகங்கள், உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் புடவை ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1.85 கோடிக்கு ஜவுளி விற்பனை நடைபெற்ற நிலையில் நடப்பு ஆண்டு 7.30 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.