ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் துறையின் மூலம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்ட வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு பட்டியல் பற்றிய கருத்து கேட்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளில் மக்களின் தேவைக்கு ஏற்ப மறுசீரமைக்கும் பணியினை மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்களுடன் ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு அதன் மூலம் பெறப்பட்ட முன் மொழிவுகளை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்து அதன் அடிப்படையில் தற்போது வரைவு மறுசீரமைப்பு வாக்குச்சாவடி மையம் அமைப்பதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளன.
அதன் அடிப்படையில் தற்போது மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 1,370 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. கூடுதலாக வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப் படையில் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 1 வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதே போல் வாக்குச்சாவடிகளின் உறுதி தன்மையை கண்டறிந்து பழுதடைந்த கட்டிடம் என கண்டறியப்பட்ட 15 வாக்குச்சாவடி மையங்கள் வேறு இடங்களில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடி மையங்கள் எண்ணிக்கை அதிகரித்தல் மற்றும் வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான கருத்துக்களை அந்தந்த பகுதியில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தெரிவித்தால் அதற்குரிய முன்மொழிவு களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மேல் நடவடிக் கைக்காக அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ரூபன் செய்தியாளர்- ராமநாதபுரம் மாவட்டம்