அரசு நிர்ணயித்த 15000 ஊதியத்தை வழங்க கோரி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு:

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக சேலம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நகராட்சி பேரூராட்சி பஞ்சாயத்து உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தொட்டி பம்ப் ஆப்ரேட்டர்களாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர் .இந்த நிலையில் தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கும் பொழுது மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என அரசு ஆணை வழங்கி ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வரும் இவர்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் வெறும் 5000 சம்பளம் மட்டுமே தற்பொழுது வழங்கி வருகிறது .இதனால் தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி 20 க்கும் மேற்பட்டோர் அரசு  நிர்ணயித்த சம்பளத்தொகை ரூபாய் 15 ஆயிரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.