தல - தளபதி மீண்டும் இணையும் கூட்டணி...!

தமிழகத்தில் குறும்பட போட்டி திறமை திருவிழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் வெங்கட் பிரபு கலந்து கொண்டார்‌. செய்தியாளர்களிடம் பேசிய போது‌ , குறும்படம் இயக்குவது மிகவும் கஷ்டம். ஏனென்றால், விஷயங்களை 3 நிமிடங்களில் சொல்ல வேண்டும் எனக்கூறியுள்ளார்.
விஜய், அஜித் ஒரே படத்தில் இயக்குவதை குறித்து கேட்ட கேள்விக்கு அவர்கள் இருவரும் ஒப்பு கொண்டால் இயக்க தயார் என்று கூறினார். ரசிகர்கள் மத்தியில் இவர்கள் இணைந்து நடிப்பது குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. நடிகர் விஜய் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பணியாற்றி வருகிறார். நடிகர் அஜித் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் AK62 - வில் நடிக்க உள்ளார். ஒரே நாளில் முன்னணி நடிகர்கள் படம் வெளியாவது சினிமாவில் அரிதான ஒன்றாகும். ரஜினி , கமல் படத்தினை தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஜில்லா, வீரம் படங்கள் ஒரேநாளில் வெளியாகி கடும் போட்டி நிலவியது. அதனை தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் ஆண்டு பொங்கல் பண்டிகையில் மீண்டும் தல தளபதி படங்கள் மோதுவது உறுதியாகியுள்ளது.