சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த உலக வங்கி மருத்துவ குழு அதிகாரிகள் பாராட்டு.....
மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட நிதி சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், உயர்தர தனியார் மருத்துவமனைக்கு இணையாக சேலம் அரசு மருத்துவமனை. இயங்கி வருவதாகவும் பெருமிதம்.....
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை இன்று உலக வங்கி மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
உலக வங்கியின் மருத்துவ குழுவைச் சேர்ந்த முதுநிலை சுகாதார கண்காணிப்பாளர்கள் தினேஷ் நாயர்,ஆருசி பட்நாயக் ,சிபில் கிரிஸ்டல் ஆகியோரும் , தமிழ்நாடு சுகாதாரத்துறை அலுவலர் டாக்டர். பவானி உமாதேவியுடன் இன்று சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து, உலக வங்கி சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பாக தமிழ்நாடு மருத்துவ துறையின் கீழ் இயங்கி வரும் தாய் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு மருத்துவமனை டீன் வள்ளி சத்யமூர்த்தி மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் ஆகியோர் உலக வங்கி சார்பில் வழங்கிய நிதி, எவ்வாறு கையாளப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்தனர். இதனை ஆய்வு செய்த உலக வங்கி மருத்துவ குழுவினர் , அரசு மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்களை பாராட்டியதோடு மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட நிதி சிறப்பாக கையாளப்பட்டுள்ளதாகவும் , உயர்தர தனியார் மருத்துவமனை போல அரசு மருத்துவமனை பராமரிக்கப்பட்டுள்ளதாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை அடுத்து , குழுவில் இடம் பெற்றிருந்த தினேஷ் நாயர் செய்தியாளிடம் கூறும் போது,சேலம் அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட நிதி சிறப்பாக கையாளப்பட்டு வருகிறது.
உயர்தர ஸ்டார் தனியார் மருத்துவமனை போல சேலம் அரசு மருத்துவமனை பராமரிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்...