சமந்தா வெளியிட்ட உருக்கமான பதிவு...!

"என் உலகமே நீ தான்"
என நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது தோல் பிரச்சனை காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் பரவியுள்ளது.
சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 அக்டோபர் 7ம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர்.‌ தற்போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து முடிவை அறிவித்தனர்.இந்நிலையில் இருவரும் தங்கள் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

கடந்த வருடம் நாக சைதன்யா பிறந்த நாள் அன்று சமந்தா போட்ட பதிவு இப்போது வைரலாகி வருகிறது.

திருமண கோலத்தில் சமந்தா, நாக சைதன்யாவை முத்தமிட்டு அந்த பதிவில் என் உலகமே நீ தான். உங்களை வாழ்த்தவில்லை. கடவுளிடம் வேண்டி கொள்கிறேன். நிச்சயம் நம் காதல் என்றும் தொடரும் என உருக்கமான பதிவிட்டிருந்தார்‌. இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி உருக்கமாக காதலித்து இறுதியில் பிரிந்து விட்டார்களே என சோகமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.