சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி, சுங்க சாவடி பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் வாழப்பாடி வட்ட வழங்கல் அலுவலர் தமிழரசி தலைமையில், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை ஆய்வாளர் ரேணுகா தேவி, எஸ் ஐ பெரியசாமி, தனி வருவாய் ஆய்வாளர் மற்றும் போலீசார் ஆகியோர் முன்னிலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு அரிசி ஆலையில் அரிசியை அரைத்து பாக்கெட் செய்து வந்துள்ளனர். இதில் ஏதாவது, ரேஷன் அரிசியை வாங்கி அரைத்து பேக்கிங் செய்து வருகிறார்களா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் ஆலை உரிமையாளரிடம் யாரேனும் ரேஷன் அரிசியினை அரைத்து பேக்கிங் செய்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுரை வழங்கிச் சென்றனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி, சுங்க சாவடி பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் திடீர் ஆய்வு..
- Details
- Written by Selvaraj
- Category: State(தமிழ்நாடு)
- Hits: 142