கோவையில் பெட்ரோல் குண்டு வெடிப்பு எதிரொலி :சங்ககிரி பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை....
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள அரசிராமணி பேரூராட்சி மூலப்பாதை பகுதியில் வாகனங்களில் ஏதாவது அசம்பாவித பொருட்கள் கொண்டு செல்ப்படுகிறதா என தேவூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அடுத்தடுத்து நடைபெற்று வருவதை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ் உத்தரவின் பேரில் சங்ககிரி டிஎஸ்பி ஆரோக்கியராஜ் தலைமையில் சங்ககிரி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதி முக்கிய பிரதான சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் அரசிராமணி பேரூராட்சி மூலப்பாதை பகுதியில் தேவூர் காவல் உதவி ஆய்வாளர் அப்பு மற்றும் போலீசார் வாகனங்களில் ஏதாவது அசம்பாவித பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சங்ககிரி செய்தியாளர்
சி.நல்லமுத்து