சேலத்தில் இருந்து திருப்பதி கருட சேவைக்கு 5 டன் பூக்கள் அனுப்பி வைப்பு.

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா தொடங்கி நடந்து வருகிறது.விழாவை ஒட்டி வருகிற 1ம் தேதி கருட சேவை நிகழ்ச்சி நடக்க உள்ளது .

இந்த கருட சேவை நிகழ்ச்சிக்காக சேலம் ஸ்ரீ பக்தி சாரர் பக்த சபா சார்பில் சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் பூக்கள் கட்டி அனுப்பும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

மஞ்சள் சாமந்தி மற்றும் சிவப்பு சாமந்தி பூக்கள் சுமார் ஐந்து டன் வரவழைக்கப்பட்டு இந்த பூக்கள் பக்தர்களால் கட்டப்பட்டது.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த பூக்களை மாலையாக கட்டினர் .

பின்னர் இந்த பூக்கள் மூட்டைகளாக கட்டி திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது .

கருட சேவை அன்று சேலத்தில் இருந்து ஸ்ரீ பக்தி சாரர் பக்த சபா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மாலைகள் சிறப்பு பூஜையில் பயன்படுத்தப்பட உள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர்.