சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தவறி விழுந்து மாணவர் படுகாயம்,
சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள கோரிமேடு பகுதியில் அரசு தொழிற் பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு சேலம் மாவட்டம் ஆசாங்குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோகுல் (வயது17) என்பவர் டர்னர் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
இன்று காலை கோகுல் ஆயுத பூஜை பண்டிகை ஒட்டி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் உள்ள பணிமனையின் மேற்கூரையில் ஏறி குப்பைகள் சுத்தம் செய்து கொண்டிருந்தார்..
அப்போது 20 அடி உயர மேற் கூரையிலிருந்து கீழே விழுந்து அவருக்கு தலையில் படுகாயம் அடைந்தார்.
உடனே மாணவரை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்த்தனர் .
இங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை