சங்ககிரியில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு முகாம்:
சங்ககிரியை அடுத்த ஆர்.எஸ்.வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் சங்ககிரி காவல்துறையினர் சார்பில் குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள ஆர்.எஸ்.வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் சங்ககிரி காவல்துறையினர் சார்பில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் சங்ககிரி காவல் ஆய்வாளர் தேவி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைத்து வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், இரவில் இருட்டான பகுதிகளில் மின் விளக்குகள் பொருத்த வேண்டும். இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஒரு குழு அமைத்து சூழற்சி முறையில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். தற்போது கொள்ளையர்கள் பூட்டியிருந்த வீடுகள் மட்டுமல்லாமல் பூட்டாமல் உள்ள வீட்டினை திறந்து உள்ளே சென்று வீட்டிற்குள் இருப்பவர்களை மிரட்டி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த அருகில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களின் செல்போன் எண்களை வாங்கிக்கொண்டு இரவில் கதவினை தட்டும் சப்தம் கேட்டால் உடனடியாக அருகில் உள்ளவர்களுக்கு செல்போனில் பேசி அனைவரும் ஒன்று சேர்ந்த பின்னர் கதவினை திறக்க வேண்டும் என்றும் சங்ககிரியில் நடைபெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை அந்தந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவைக் கொண்டு கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பேசினார். அப்போது
காவல் உதவி ஆய்வாளர் சுதாகரன், சங்ககிரி பேரூராட்சி 17 வது வார்டு கவுன்சிலர் கங்காதேவி, இந்தியன் வங்கி அதிகாரி முருகேசன், வழக்கறிஞர் ராஜா, சங்ககிரி ரோட்டரி சங்க நிர்வாகி திவாகரன் உள்ளிட்ட அப்பபகுதி பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
சங்ககிரி செய்தியாளர்
முத்து...