பணியிடங்கள் விவரம் :

1.Junior Engineer:(Civil Engineering):5 இடங்கள் (பொது -2, ஓபிசி- 2 எஸ்சி-1). சம்பளம்: 34,000 முதல் 1,03,400 .வயது 28க்குள். தகுதி சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி. இ அல்லது டிப்ளமோ மற்றும் ஓராண்டு முன் அனுபவம்.

2.Stenographer Grade -II: 8 இடங்கள் (பொது).சம்பளம்: 30,500 முதல் 88,100 .வயது 25க்குள். தகுதி :பட்டபடிப்புடன்  ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறனும் ,ஆங்கில குறுக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

3.Assistant Grade-III(General):155 இடங்கள்(பொது -74, பொருளாதாரப் பிற்பட்டோர்- 15 ,ஓபிசி -40, எஸ்சி- 21, எஸ்டி- 5). சம்பளம்: 28,200 முதல் 79,200 .வயது 27க்குள். தகுதி:ஏதேனும் ஒரு பட்டத்துடன் கம்ப்யூட்டர் அறிவில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

4.Assistant Grade-III (Accounts) : 107 இடங்கள்( பொது -55, பொருளாதாரப் பிற்பட்டோர்- 11, ஓபிசி -21,எஸ்சி- 16, எஸ்டி- 4). தகுதி:பி காம் மற்றும் கம்ப்யூட்டரில் தேர்ச்சி.

5..Assistant Grade-III(Technical):257 இடங்கள்(பொது -46, பொருளாதாரப் பிற்பட்டோர்- 35 ,ஓபிசி -115, எஸ்சி- 44, எஸ்டி- 17).வயது 27க்குள்.தகுதி:வேளாண்மை பாடத்தில் B.Sc அல்லது தாவரவியல்/ விலங்கியல்/ உயிரி தொழில்நுட்பம்/ உயிரி வேதியியல்/ நுண்ணுயிரியல்/ உணவு அறிவியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பிஎஸ்சி அல்லது உணவு அறிவியல்/ உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வேளாண்மை இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் B.E/B.Tech  மற்றும் கம்ப்யூட்டர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6.Assistant Grade-III(Depot):435 இடங்கள்(பொது -164, பொருளாதாரப் பிற்பட்டோர்- 48 ,ஓபிசி -117, எஸ்சி- 88, எஸ்டி- 18). சம்பளம்: 28,200 முதல் 79,200.தகுதி :ஏதேனும் ஒரு பட்டத்துடன் கம்ப்யூட்டரில் தேர்ச்சி.

7..Assistant Grade-III(Hindi):22 இடங்கள்(பொது -14, ஓபிசி -5, எஸ்சி- 3). சம்பளம்: 28,200 முதல் 79,200.தகுதி:இந்தியை முக்கிய பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பு. மேலும் ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கும். ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்தி டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: 500 இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்.சி /எஸ்.டி பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

https://www.fci.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பிக்க கடைசி நாள் 5 -10- 2022.